ரயில்வே வேலை நிறுத்தம் தற்காலிகமாக மீளப்பெறப்படுகிறது!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) வரை அமுலில் இருக்கும் தமது திட்டமிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அவர் விளக்கமளிக்கையில், “ரயில்வே பொது மேலாளருடனான கலந்துரையாடலின் போது, ​​எங்களின் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தன. இருப்பினும், பதவி உயர்வுகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அவர்களால் ஒரு குறிப்பிட்ட பதிலை வழங்க முடியவில்லை.

இந்த கலந்துரையாடலில் பதில் அமைச்சர் பங்கேற்று, திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

“இந்த முரண்பாடே தற்போதைய பிரச்சினைக்கு காரணம்” என்று சோமரத்ன குறிப்பிட்டார். திருத்தம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள பொதுச் சேவை ஆணைக்குழு கூட்டத்தின் போது அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply