களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
காரை ஓட்டி வந்த சீன நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு விபத்தை ஏற்படுத்திய காரை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.