அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய 42 வயதுடைய நபர் பூங்காவிற்கு அருகில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 4-78 வயதுடையவர்களும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 8 மற்றும் 29 வயதுடைய இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஓக்லாண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.