வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்கமுடியும்! வெதுப்பக உரிமையாளர் சங்கம் !

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சில வர்த்தக குழுக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையானப் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, இது தமது தொழிற்துறையைப் பாரியளவில் பாதித்துள்ளதாலேயே, வெதுப்பக உற்பத்திகளின் விலையினைக் குறைக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோதுமை மாவின் விலையினை 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும், எனினும் வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர், எனவும் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply