கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் தர்மபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply