வவுனியாவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது!

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஒன்று  ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது, ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் உள்ள நில அதிர்வு நிலையங்களிலும்  பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply