பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு உட்படுத்த தீர்மானம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்  மனுக்களை ஜூலை 8, 2024 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், பேராசிரியர் சாவித்திரி குணசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த 8 மனுக்களை பரிசீலித்த மூவரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply