நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு (07) ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று (19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவரின் வீட்டிலே வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதனையடுத்து அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்எனவும் , சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.