நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் தடயவியல் பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காயம் அடைந்த சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
