அரச பாடசாலைகளின் தரம் 01 வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தற்போதைய சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமவாய்ப்பு கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது வெளிப்படைத்தன்மையுடனும் முறைகேடுகளை குறைக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருத்தப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளுக்கான தரம் 01 வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுமதிப்பதற்கும் அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
