இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக 2024 ஜூன் 20 முதல் இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹாரே, பல்லேகலே, 11வது பிரிவின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானியின்  அலுவலகத்தில் தலைமைத் தளபதியாக பணியாற்றியுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தின் துணை ஜெனரலாகவும், விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின்  கர்னலாகவும், பாதுகாப்புப் படையின் 18வது தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply