சமூகமட்டத்தில் அடையாளம்காணப்பட்ட 5 வயது கொரோனா நோயாளி

பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா நோயாளி நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பொலநறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமாரவங்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளி லங்காபுர பிரதேச செயலயத்தில் கடமை செய்த சிவில் பாதுகாப்பு அதிகாரியின் 5 வயதுடைய மகள் என தெரியவந்துள்ளது.

சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று முன்தினம் மேற்கொளள்ப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் உறுதியாகியது.

அதன் பின்னர் அவரது மனைவி மற்றும் மகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கமைய மகளுக்கும் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளளார்.

அதற்கமைய லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 12ஆகும் என சுகாதார பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir