9 விக்கட்டுகளால் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி !

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட அமெரிக்க அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சாய் ஹோம் அதிகபட்சமாக 81 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply