சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்பில் பதுங்கியிருந்த இலங்கையர்கள் கைது!

ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரும் தங்களை ஜூலியஸ் (23) மற்றும் ஜூட் ஆண்டனி (32) என அடையாளப்படுத்திக் கொண்டு இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸ் திணைக்கள ஆதாரங்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபைபர் படகு முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு, கண்காணிப்புப் பணியாளர்கள் படகு மண்டபம் நோக்கி வருவதைக் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக  இந்திய பொலிஸ் அதிகாரி கூறியிள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply