ரி20 உலகக்கிண்ணப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடம்!

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 124 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது,

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply