பிரிவெனா கல்விக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
கல்வி அமைச்சும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பிரிவெனா கல்வியை மேம்படுத்தும் வகையில் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இதன் மூலம், பிரிவெனா தொடர்பான ஆசிரியர்கள், மதகுருமார்கள் மற்றும் மதகுருமார் அல்லாத மாணவர்கள் ஆகியோர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் தேசிய பௌத்த பாரம்பரியத்தை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு பிரிவெனாவிற்கும் குறைந்தது இரண்டு கணனிகள், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பிரிண்டர் வழங்கும் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
