ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இதனால், பெட்டாவை நோக்கி செல்லும் பாதைகள் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளதுடன் , கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியும் எதிர்ப்பு பேரணி காரணமாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
