5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனர்களின் உத்தியோகபூர்வ கடனாளர் குழுவுடன் பிரான்சின் பாரிஸில் சிறிது நேரத்திற்கு முன்னர் எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன், அத்தியாவசியமான பொதுச் சேவைகளுக்கு நிதியை ஒதுக்குவதற்கும், அதன் அபிவிருத்தித் தேவைகளுக்கு சலுகை நிதியைப் பெறுவதற்கும் இலங்கையை அனுமதிக்கிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
