ரணில் அரசாங்கம் ஆட்சியிலிருந்து செல்வதே நற் செய்தியாக அமையும்! டலஸ் அழகப்பெரும கருத்து!

ரணில் விக்கிரமசிங்ஹ அரசாங்கம் ஆட்சியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் என்பதே எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்ற நற்செய்தியாக அமையும் என மக்கள் சுதந்திர பேரவையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கூற்றின்படி, இரண்டு வருடங்களாகியும் இன்னும் எமது நாடு பெற்ற கடனை திரும்பிச் செலுத்தவில்லை என்பதை காட்டுகின்றது, அதேபோல் இன்னும் நான்கு வருடங்களுக்கு கடன் திரும்பிச் செலுத்தப்பட மாட்டாது என்பதும் தெரிகின்றது எனவும் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply