தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்! கிராம நிர்வாக அலுவலர்கள் எச்சரிக்கை!

இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தமது சேவை அரசியலமைப்பு கோரிக்கைகள் தொடர்பில் இன்று தீர்க்கமான கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கொடிகார எச்சரித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply