லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply