தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தம்புள்ளை-இமானுவ பிரதேச்தில் நடத்திச் செல்லப்பட்ட தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது 9 பெண்கள் மற்றும் 4 ஆண்களை குறித்த இடத்திலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் குறித்த தசை பிடிப்பு நிலையங்களுக்கு வந்துச் சென்றவர்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற்று அவர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir