தோல்வியுடன் விடைபெற்ற ரொனால்டோ!

நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை எனினும் இறுதியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி போர்த்துகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்த்து பிரான்ஸ் விளையாடவுள்ளது.

இதேவேளை, போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply