இந்தியா – சிம்பாப்பே அணிக்கிடையில் டி20 தொடர் இன்று ஆரம்பம்!

இந்திய கிரிக்கெட் அணி, சிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் முதலாவது போட்டியானது ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கலந்து கொள்ளும் டி20 தொடர் இதுவாகும்.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 ஆட்டத்தில் இந்தியாவும், 2 ஆட்டத்தில் சிம்பாப்பேயும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply