பேரனின் மனைவியால் 78 வயது மூதாட்டி கொலை!

அத்கல, உலப்பனே பகுதியில் மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (7) காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது பேரன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

பேரனின் மனைவியால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது பேரன் வீட்டில் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

கொலையை செய்த 32 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply