இலங்கை குடியுரிமையின்றி இலங்கையின் கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வாசிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரான டயானா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றில் முன்வைத்தனர்.
இதன்படி, குறித்த குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் வாசிக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.