இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகரின் சார்பில் அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொரளை பொலிஸாருக்கு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.