திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் அண்ணன், தம்பி என இருவர் சர்தாபுர விசேட அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
26, 28 வயதுடைய சகோதரர்களே கைது செய்யப்பட்டனர் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.