குறைக்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பாண் உள்ளிட்ட பேக்கரிகள் உற்பத்திகளின் விலையை குறைப்பது சாத்தியமில்லை என இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உணவு வகைகளுக்கு தேவையான முக்கிய பொருட்களான மா, சீனி, முட்டை, மாஜரின் ஆகியவற்றின் விலை குறைக்கப்படாததால், பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாதுள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் போது மாத்திரமே பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இன்றைய நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே பேக்கரி தொழிற்துறையை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.