ஜப்பானுக்குப் புறப்பட்டார் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இ ருந்து புறப்பட்டுச் சென்றார்.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

அதன்படி, நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு ஜப்பானில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலரையும் அநுரகுமார எம்.பி. சந்திக்கவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply