அதிக தேர்தல் சட்ட விதிமீறலை செய்த மொட்டு கட்சி

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் தொடர்பான மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக 15 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir