ஹம்பேகமுவ குகுல்கடுவ பிரதேசத்தில் விவசாய நிலமொன்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) காலை ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குக்குல்கடுவ பிரதேசத்திற்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக வந்த மஹகம, மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே, குடிசைக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இருவருடன் குடிசையில் மது அருந்திய போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கூரிய ஆயுதத்தால் குத்தி குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் 25 மற்றும் 27 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் ஹம்பேகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
