வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாணந்துறை சேர்ந்த 80 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்தின் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir