ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர் மேலும் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ‘ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் கட்சி வேட்பாளரை முன்வைப்போம்’ என்றார்