கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இரட்டை நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது என அல்ஜஸீரா செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள கோஃபா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கனமழை காரணமாக இரண்டு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலச்சரிவு காரணமாக 1500 குடும்பங்களுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.