பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன () தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விலை குறைப்பானது இன்று (26) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்க குறைக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசனை செய்து, பாண் மற்றும் பேக்கரி உற்பத்தி விலைகள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என அண்மையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இதற்கு அமைய இன்றைய தினம் பாணின் விலை குறைப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.