டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, கனேடிய டொலரின் விற்பனை விலை 224.30 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 336.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 336.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply