அமெரிக்கா தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸ் – குவியும் ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸிற்கு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு வழங்கியுள்ளார்.

பில் கிளின்டன் ஹரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாத நிலையில் தற்போது தனது மனைவியுடன் இணைந்து கமலா ஹரிஸினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் குறித்த காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

“இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்”. என இருவருக்கும் கமலா ஹரிஸ் பராக் ஒபாமாவின் அழைப்புக்கு பதில் வழங்கியுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply