இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் நீதியான – சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்கின்றோம் என்றும் அமெரிக்கத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.