தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுன திங்கட்கிழமை முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது தமது கட்சி சார்பில் வேட்பாளராகத் தம்மிக்க பெரேராவைக் களமிறக்குவதா என்பது குறித்து மொட்டுக் கட்சி பரிசீலித்து வருகின்றது. இந்நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply