தேர்தலில் களமிறங்குவதை மீண்டும் உறுதிபடுத்தினார் ஜனாதிபதி !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மக்கள்முன் உறுதிபடுத்தினார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா வெள்ளிக்கிழமை (26) ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பிணைப்பத்திரங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply