பிரபஞ்சம் வேலைத்திட்டத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை? நளின் பண்டார முறைப்பாடு!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

ஒன்பது பாடசாலைகளுக்கு வகுப்பறை உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் திட்டங்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிலேயே முறைப்பாட்டினைப் பதிவுசெய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதிக்கும் அதேவேளை, சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரபஞ்சம் திட்டத்தில் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply