சிங்கப்பூரில், நேற்று கொரோனாவால், 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 346 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, 27 பேர் பலியாகியுள்ளனர். 47 ஆயிரத்து,179 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில், 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான அறிகுறி உள்ள, 5,700 பேர், தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.