தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்கள் விபரம் வெளியானது!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் மூன்று வேட்பாளர்கள் இன்று (ஆகஸ்ட் 05) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை மொத்தம் 17 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இதேவேளை, சுயேட்சை  வேட்பாளராக   பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக இன்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் வைத்தியர் கே.ஆர். கிஷான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply