கிளப் வசந்த கொலைவழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட பத்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன் சந்தேகத்திற்குரிய மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஜூலை 08 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்ற அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட பத்து சந்தேக நபர்களையும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply