கைக்குழந்தையை கொடூரமாக தாக்கி கொன்ற தாய் கைது!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையின் தாயினால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நாற்பத்திரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தலை மற்றும் உடலின் மற்ற பாகங்களில் காயங்கள் உட்பட குழந்தைக்கு மரண காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் பாலூட்டிய பின்னர் குழந்தை சுயநினைவை இழந்ததாகக் கூறி, குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் முதலில் அனுமதித்திருந்தார். இதனையடுத்து குழந்தை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும், பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தது என  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் கைகளில் ஒன்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குழந்தை தாய்ப்பாலை மறுத்ததையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

33 வயதான தாய் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply