காணாமல் போன ரயில்வே ஊழியரின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிப்பு!

தெமட்டகொட ரயில்வே ஊழியரின் காணாமல்போன  சடலம் முற்ற  வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சக ஊழியர் ஒருவரைக் கண்டுபிடிக்க இதுவரை  உரிய நடவடிக்கை   எடுக்கப்படவில்லை எனக் கூறி, தெமட்டகொட முற்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிலிருந்து விலகியதன் காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து செல்லும் ரயில் சேவைகள் இன்று முற்பகல் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளன.

இதனால், இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்த ‘பொடி மெனிகே’ மற்றும் ‘பதுளை ஒடிஸி’ புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவில்லை.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply