கொரோனா காலத்தில் தேர்தலை நடாத்திய முதல் தெற்காசிய நாடாக இலங்கை!

கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் அவர் இவ்வாறு நன்றிதெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலில் கிட்டத்தட்ட 71வீதமானோர் வாக்களித்துள்ளமைக்கு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir