வாக்குப்பெட்டி கொண்டுசென்ற வாகனம் விபத்து

அம்பலங்கொட – காலி சவுன்லன்ட்ஸ் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளுடன் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்து, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீடியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வான் உந்துருளி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் வாக்கு பெட்டிகள் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக மீடியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir