அத்துரிகிரியவில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் உட்பட 11 சந்தேகநபர்கள் இன்று (20) மீண்டும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.